/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எல்லையோர கிராம மக்களுக்கு விழிப்புணர்வு
/
கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எல்லையோர கிராம மக்களுக்கு விழிப்புணர்வு
கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எல்லையோர கிராம மக்களுக்கு விழிப்புணர்வு
கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எல்லையோர கிராம மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 01, 2024 02:24 AM

பந்தலுார்;'பந்தலுார் சுற்றுப்புற பகுதகிளில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வரவேற்றார். டி.எஸ்.பி., சரவணன் பேசுகையில்,''தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஒழிப்பதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. கள்ளச்சாராயம் அருந்திய பலரும் உயிரிழந்து குடும்பங்கள் நிர்கதியானது அனைவருக்கும் தெரியும்.
எனவே, தமிழக எல்லை பகுதியான இங்கு யாரேனும் கள்ள சாராயம் காய்ச்சினால் அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கூடலுார் ஆர்.டி.ஓ., செந்தில்குமார் பேசுகையில், ''பந்தலுார் சுற்றுவட்டார பகுதி, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின் மக்கள் அதிகமான பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் கடந்த காலங்களில் கள்ளச்சாராயம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது, கள்ளச்சாராயம் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இதே நிலை தொடர வேண்டும். மாறாக கிராமப்புறங்களில் யாரேனும் கள்ள சாராயம் காய்ச்சினால் பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சினாலும்,விற்பனை செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.