/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வழிப்பாதையை மீட்டு தர கிராம மக்கள் வலியுறுத்தல்
/
வழிப்பாதையை மீட்டு தர கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 29, 2024 11:19 PM
குன்னுார்:'ஜெகதளா பஞ்சாயத்தில் சிக்கரிசி கிராமத்தில் ஏற்கனவே இருந்த வழிப்பாதையை மீட்டு தர வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஜெகதளா பேரூராட்சி சிக்கரசி கிராமத்தில், 18 குடும்பங்கள் உள்ளன. 1966ம் ஆண்டு அரசு பட்டா வழங்கியது. 1994ம் ஆண்டில் ஜெகதளா பஞ்சாயத்து சார்பில், பேரார் முதல் சிக்கரசி கிராமம் வரை, 2.5 கி.மீ. துாரம் பாதை அமைக்கப்பட்டதுடன், குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இங்குள்ள வழியின் இரு புறமும் சிலர் கேட் அமைத்து போக்குவரத்துக்கு தடை செய்தனர். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது.
கலெக்டர் உத்தரவின் கீழ், ஆய்வு செய்த கோத்தகிரி வருவாய் துறையினர் இதற்கு தீர்வு காணாததால், குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஊர் தலைவர் கோபால் கூறுகையில்,''இங்கு நத்தம் பகுதியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனை வைத்து, வழி பாதையில் செல்ல சிலர் தடை விதித்ததால் பஞ்., சார்பில் ஏற்படுத்தி கொடுத்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆய்வு மேற்கொண்ட வருவாய் துறையினர் ஒரு தலை பட்சமாக செயல்படுகின்றனர்.
இங்கு மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, பஞ்., அமைத்த குடிநீர் தொட்டியை மக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும். வழி பாதை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

