/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பர்லியாரில் போக்குவரத்து கழகம் விதிமுறை மீறல்; இலவச கழிப்பிட வசதி இல்லாததால் அவதி
/
பர்லியாரில் போக்குவரத்து கழகம் விதிமுறை மீறல்; இலவச கழிப்பிட வசதி இல்லாததால் அவதி
பர்லியாரில் போக்குவரத்து கழகம் விதிமுறை மீறல்; இலவச கழிப்பிட வசதி இல்லாததால் அவதி
பர்லியாரில் போக்குவரத்து கழகம் விதிமுறை மீறல்; இலவச கழிப்பிட வசதி இல்லாததால் அவதி
ADDED : ஆக 20, 2024 10:08 PM
குன்னுார் : குன்னுார் பர்லியாரில் இலவச கழிப்பிடம் வசதி ஏற்படுத்தாமல், அரசு பஸ்கள் நிறுத்த உத்தரவிடப்பட்டது பயணிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் கூடலுார் உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் சமவெளிக்கு செல்லும் அரசு பஸ்கள், குன்னுார் பர்லியார் பகுதியில் கட்டாயம் நிறுத்தி செல்ல வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
இங்கு நிறுத்தி செல்லாத டிரைவர்கள் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்குவரத்து கழகம், டெண்டர் விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது பயணிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.
குறிப்பாக, இங்குள்ள கேன்டீன் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டெண்டர் விடப்பட்ட நிலையில், 'இலவச கழிப்பிடம் அமைக்க வேண்டும்' என்ற, விதிமுறை மீறப்பட்டுள்ளது.
இங்குள்ள கட்டண கழிப்பிடமும் சுகாதாரம் இல்லாததுடன், 10 ரூபாய் என கூடுதலாக வசூல் செய்வதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மிகவும் பழமை வாய்ந்த இந்த கட்டண கழிப்பிட கழிவுகள் அருகில் உள்ள குடியிருப்புகள் வழியாகவும், அரசு தோட்டக்கலை மற்றும் தனியார் தோட்டங்களில் சென்று கலப்பதாகவும் புகார்கள் இருந்தும், பஞ்சாயத்து நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
வெலிங்டன் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தர்மசீலன் கூறுகையில், ''சமவெளிக்கு நெடுந்துாரம் செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தும் இடத்தில் கட்டாயம் இலவச கழிப்பிடம் இருக்க வேண்டும். ஆனால், அரசு போக்குவரத்து கழகம் கேன்டீன் டெண்டர் விட்ட நிலையில், இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்தவில்லை. அருகில் உள்ள கட்டண கழிப்பிடமும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கட்டண விபர போர்டு வைக்காமல் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம். அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

