ADDED : மே 02, 2024 07:09 AM
குன்னுார் : குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு, லடாக் துணைநிலை கவர்னர் பிரிகேடியர் பி.டி.,மிஸ்ரா நேற்று வந்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், தற்போது 'அக்னிபத்' ராணுவ வீரர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ரெஜிமென்ட் சென்டருக்கு நேற்று, லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா வந்தார்.
லடாக்கில் இருந்து விமானத்தில் கோவை வந்த அவர், காரில் நேற்று மாலை வெலிங்டன் ராணுவ மையத்திற்கு வந்தார். எம்.ஆர்.சி., கமாண்டன்ட் சுனில்குமார் யாதவ், மாவட்ட கலெக்டர் அருணா, தாசில்தார் கனி சுந்தரம் கவர்னரை வரவேற்றனர்.
தொடர்ந்து, ராணுவ பயிற்சி மையத்தின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று, 4ம் தேதி கோவை சென்று, அங்கிருந்து லடாக் புறப்படுகிறார். கவர்னரின் வருகையையொட்டி, ராணுவ மைய பகுதியில் பலத்த போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

