/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
/
எல்லையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஆக 14, 2024 08:47 PM
பந்தலுார் : கேரளா மாநிலம் வயநாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை உள்ளிட்ட கிராமங்கள் நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்து போனது. அதில், சிக்கிய, 400க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் உடல்கள் காணவில்லை. சம்பவம் நடந்து, 15 நாட்கள் கடந்த நிலையிலும், மண்ணில் புதைந்த உடல்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து, 30 கி.மீ., தொலைவில் உள்ள இருட்டு குத்தி, சூஜிப்பாறை, பறப்பன்பாரா, முன்டேரி, மம்பாடு உள்ளிட்ட பகுதிகளிலும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்ட உடல்கள் அதிக அளவில் மீட்கப்பட்டது. மேலும் சாலியாறு பாயும் பகுதிகளில் உடல் பாகங்கள், மண்ணில் புதைந்த நிலையில் மீட்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சில இடங்களில் உடல் பாகங்கள் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது.
இதனால் வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளில்,'எச் -1 ,என்-1' எனப்படும் வைரஸ் பரவல் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் காய்ச்சல் பரவி பலர் உடல் நலம் பாதிக்கப்படும் நிலையில், அனைவரும் முகவசம் அணியவும், கிருமி நாசினிகள் பயன்படுத்தவும் சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளனர்.
நீலகிரி சுகாதார துறையின் கூறுகையில், 'வயநாடு எல்லையில் உள்ள, பந்தலுார், கூடலுார் சுற்றுப்புற கிராம மக்கள், பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வருவதால், அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; முககவசம் அணிய வேண்டும். மேலும், எல்லையோர சோதனை சாவடியில் தீவிர பரிசோதனைக்கு பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்படும்,' என்றனர்.