ADDED : ஜூன் 15, 2026 05:50 PM
பந்தலுார்: நீலகிரி மாவட்டத்தில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், 2019 ஆக மாதம், மாவட்டம் முழுவதும், 93 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம். அமைக்கப்பட்டது. இவை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில்,போதிய பராமரிப்பு இல்லாத நிலையில், பெரும்பாலான இடங்களில் வீணாக காணப்படுகிறது. இத்தகைய வாட்டர் ஏ.டி.எம்.,களை வியாபாரி சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து மாவட்டத்தில் காணப்படும் தானியங்கி தண்ணீர் இயந்திரங்களை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையை சேர்ந்த தனியார் நிறுவனம், இதற்கான டெண்டர் எடுத்துள்ள நிலையில், நேற்று முதல் இவற்றை அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கூறுகையில்,‘ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும்,’ என்றனர்.
