/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் செயல்படாமல் உள்ள 'வாட்டர் ஏ.டி.எம்'; தாகம் தீர்க்க களம் இறங்கிய கல்லுாரி மாணவர்கள்

ADDED : பிப் 21, 2025 10:39 PM

குன்னுார்; குன்னுார் பகுதிகளில் வாட்டர் ஏ.டி.எம்.,கள் செயல்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் ஸ்டாண்டில், அரசு கல்லுாரி மாணவர்கள், பயணிகளுக்கு உதவும் வகையில், குடிநீர் தொட்டி வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், 19 ஆண்டுகளாக பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில், கடந்த, 2019ம் ஆண்டு ஆக., 15ம் தேதியில் இருந்து, 'பிளாஸ்டிக்'' குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்காக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் தாகத்தை தீர்க்க, சுற்றுலா மையங்கள் உட்பட, பல இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்., வைக்கப்பட்டது. அதில், பல வாட்டர் ஏ.டி.எம்.,கள் இயங்காமல் உள்ளன.
இந்நிலையில், குன்னுார் பஸ் ஸ்டாண்ட் உட்பட பல இடங்களிலும் உள்ள வாட்டர் ஏ.டி.எம்.,கள் அகற்றப்பட்டுள்ளன. இதில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், வைக்கப்பட்ட வாட்டர் ஏ.டி.எம்.,கள், பயனின்றி உள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் அவதிப்படும் சூழல் உள்ளது. மேலும், உள்ளூர் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊட்டி அரசு கல்லுாரி மாணவர்கள்,'வாழ்வோம்; வாழ வைப்போம்' தன்னார்வ அமைப்பு சார்பில், குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுகாதாரமான குடிநீர் சிறிய தொட்டிகள் இரு இடங்களில் வைக்கப்பட்டது.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். இந்த குழுவினர் குடிநீர் தொட்டிகள் வைத்து பயணிகளின் தாகத்தை தணித்துள்ளது வரவேற்கதக்கது,' என்றனர்.