/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உணவு விடுதிக்கு குடிநீர் குழாய் இணைப்பு; ஊட்டி - கோத்தகிரி சாலையில் மக்கள் மறியல் போராட்டம்

ADDED : மார் 07, 2025 09:54 PM

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே, உணவு விடுதிக்கு தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில், 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு குடிநீர் வினியோகத்தில் பிரச்னை இருந்து வருகிறது. இப்பகுதி பூங்கா அருகே உள்ளதால், காட்டேஜ்கள் மற்றும் உணவு விடுதிகளில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இங்குள்ள தனியார் உணவு விடுதிக்கு, இரண்டு 'இன்ச்' அளவில், குடிநீர் குழாய் இணைப்பை, நகராட்சி ஊழியர்கள் சாலையை தோண்டி பதித்துள்ளனர். 'இதனால் இப்பகுதி மக்களுக்கு, குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும்,' எனக்கூறி, கோத்தகிரி சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோத்தகிரி- ஊட்டி வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு மற்றும் போலீசார் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவரும் கடும் வாக்குவாதம் செய்து, அங்கு பதிக்கப்பட்ட இரண்டு 'இன்ச்' குழாயை அகற்றினர்.
தொடர்ந்து, ' இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், மறியல் கைவிடப்பட்டு போக்குவரத்து சீரானது.