/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம்
/
வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம்
வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம்
வார்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம்
ADDED : மார் 28, 2024 11:55 PM

பந்தலுார்;நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கோடை வெப்பம் காரணமாக குடிநீர் கிணறுகள் வற்றி, பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் நகராட்சி மூலம் மூன்று வாகனங்களில் சுழற்சி முறையில் ஒவ்வொரு கிராமங்களாக, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதில், நகராட்சிக்கு சொந்தமான ஒரு குடிநீர் லாரி மற்றும் இரண்டு வாடகை வாகனங்கள் மூலம், நாடுகாணி உள்ளிட்ட குடிநீர் அதிகம் உள்ள கிணறுகள் தேர்வு செய்து, குடிநீர் கொண்டு வந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நாள்தோறும், 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவை முழுமையாக தீர்க்க முடியாத நிலையிலும், அன்றாட தேவைக்கு குடிநீர் கிடைத்து வருகிறது. இதனால், குடிநீர் லாரிகள் வரும் நாட்களில் பொதுமக்கள் பணிக்கு செல்லாமல் காத்திருந்து, தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். கோடை மழை வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.