/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எமரால்டு ஆர்.கே.பி., லைன் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு
/
எமரால்டு ஆர்.கே.பி., லைன் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு
எமரால்டு ஆர்.கே.பி., லைன் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு
எமரால்டு ஆர்.கே.பி., லைன் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு
ADDED : ஏப் 02, 2024 10:35 PM
ஊட்டி;ஊட்டி அருகே எமரால்டு ஆர்.கே.பி., லைன் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி எமரால்டு ஆர்.கே.பி.,லைன், 19 வார்டு உறுப்பினர் லட்சுமி சண்முகவேல், கலெக்டருக்கு அளித்துள்ள கோரிக்கை மனு:
ஊட்டி எமரால்டு வ.உ.சி., நகர், 19 வது வார்டுக்கு உட்பட்ட, ஆர்.கே.பி., லைன் பகுதியில், 150 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானோர், கூலித் தொழிலாளர்கள்.
இப்பகுதியில், குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால், குடிநீரை சேமித்து வைக்க ஏதுவாக, 5,000 லிட்டர் குடிநீர் தொட்டி கேட்டு, பலமுறை விண்ணப்பித்தும், இதுவரை கிடைக்கவில்லை.
மேலும், 'பழைய அட்டுபாயில் பகுதியில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்துள்ள நிலையில், புதிய குழாய்கள் வழங்கவேண்டும்,' என, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை விடுத்தும், எவ்வித பதிலும் இல்லை.
எனவே, பகுதி மக்கள் நலன் கருதி, குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

