/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கைதக்கொல்லி பகுதிக்கு குடிநீர் வினியோகம் துவக்கம்
/
கைதக்கொல்லி பகுதிக்கு குடிநீர் வினியோகம் துவக்கம்
ADDED : ஏப் 27, 2024 12:38 AM
பந்தலுார்:பந்தலுார் கைதக்கொல்லி பகுதியில் குடிநீர் வினியோகம் துவக்கப்பட்டது.
பந்தலுார் அருகே தேவாலா கைதக்கொல்லி கிராமத்தில், அரசு பழங்குடியினர் பள்ளி அருகே, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள்  நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த பேச்சு வார்த்தையில், 'குடிநீர் வினியோகம் உடனடியாக வழங்கப்படும்,' என, நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் தெரிவித்தார்.
தொடர்ந்து, அந்த  பகுதிக்கு நகராட்சி  லாரி மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, நகராட்சி குடிநீர் பணியாளர் முன்னிலையில் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டது.
இதன் மூலம் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

