/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மிசோரமிலும் உருளைக்கிழங்கு ஏல மையம் ஏற்படுத்துவோம் தோட்டக்கலைத் துறை சிறப்புச் செயலாளர் தகவல்
/
மிசோரமிலும் உருளைக்கிழங்கு ஏல மையம் ஏற்படுத்துவோம் தோட்டக்கலைத் துறை சிறப்புச் செயலாளர் தகவல்
மிசோரமிலும் உருளைக்கிழங்கு ஏல மையம் ஏற்படுத்துவோம் தோட்டக்கலைத் துறை சிறப்புச் செயலாளர் தகவல்
மிசோரமிலும் உருளைக்கிழங்கு ஏல மையம் ஏற்படுத்துவோம் தோட்டக்கலைத் துறை சிறப்புச் செயலாளர் தகவல்
ADDED : ஆக 26, 2024 12:47 AM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு, பூண்டு ஏல மையத்தை போல் மிசோரமிலும் ஏற்படுத்துவோம் என அம்மாநில தோட்டக்கலைத் துறை சிறப்புச் செயலாளர் கூறினார்.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவுச் விற்பனை சங்கத்தின் மேட்டுப்பாளையம் கிளை செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, இச்சங்கத்தின் செயல்பாடுகளை கள ஆய்வு செய்ய, நேற்று மிசோரம் மாநில அரசு, விவசாயம், விவசாயிகள் நலன் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சிறப்புச் செயலாளர் ராம்டின்லியானி தலைமையில் 6 உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை இங்கு அனுப்பி வைத்தது.
அவர்கள் விற்பனைக் கூடத்தில் ஏலம் விடப்படுவதை பார்வையிட்டனர். விவசாயிகள், வியாபாரிகளிடம் கலந்துரையாடினர். மேலும், மிசோரம் குழுவினருக்கு, நீலகிரி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கத்தின் இணைப்பதிவாளர் தயாளன், துணைப்பதிவாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர். பின், மிசோரம் மாநில சிறப்புச் செயலாளர் ராம்டின்லியானி கூறியதாவது:-
இங்கு, மலைப்பகுதி மக்களின் வேளாண் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி, இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகளுக்கு நியாயமான, லாபமான விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் பணியைச் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பூண்டு ஆகியவை ஏலம் விடப்படுவதைப் போன்று மிசோரமில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விற்பனை செய்ய உள்ளோம். கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள், விவசாயிகளின் கருத்துகள், வியாபாரிகளின் வியாபார யுத்திகள், போன்றவற்றை எல்லாம் ஆராய்ந்து மிசோரம் அரசுக்கு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள இந்த கட்டமைப்பு போல் மிசோரமிலும் உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, நீலகிரி மாவட்டக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் கூறுகையில், நம் சங்கத்தின் செயல்பாடுகளை கூகுள் வாயிலாக மசோரம் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர் என்றார்.
பின், இக்குழுவினர் மேட்டுப்பாளையம், கெண்டையூர் சாலையில், செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களின் உரக்கலவைப் பிரிவையும் பார்வையிட்டனர். அதன் செயல்பாடுகள் விற்பனை, கொள்முதல், ஆய்வகம் ஆகியவை பற்றியும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.- --