/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உருளை கிழங்கு தோட்டத்தில் களை எடுக்கும் பணி
/
உருளை கிழங்கு தோட்டத்தில் களை எடுக்கும் பணி
ADDED : பிப் 28, 2025 10:26 PM

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் பயிரிட்டுள்ள உருளை கிழங்கு தோட்டத்தில், களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தப் படியாக, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முள்ளங்கி, உருளை கிழங்கு மற்றும் முட்டைகோஸ், உள்ளிட்ட மலை காய்கறி பயர்கள் அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப் படுகிறது.
தரமான விதை, பூச்சி கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களின் விலையேற்றம் மற்றும் கூலி உயர்வு காரணமாக, மாவட்டத்தில் உருளை கிழங்கு சாகுபடி குறைந்த அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பாண்டு, நீர் ஆதார முள்ள விளை நிலங்களில், விவசாயிகள் கூடுமானவரை கடன் பெற்று, கணிசமான பரப்பளவில் உருளை கிழங்கு பயிரிட்டுள்ளனர். அறுவடையின் போது, போதிய விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அதிக சிரத்தையுடன் பயிரை பாதுகாத்து வருகின்றனர்.
தற்போது, உருளை கிழங்கு விதைத்த தோட்டங்களில், பயிர்கள் செழித்து வளர்ந்து காணப்படுகிறது. பயிர்கள் தரையில் சாயாமல் இருக்க தண்டு பகுதியில் மண் சேர்த்து, உரமிட்ட தோட்டங்களில் களை எடுக்கும் பணியில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
இப்பணியை அடுத்து, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி, பூச்சி மருந்து தெளிக்கும் பட்சத்தில், உருளை கிழங்கு மகசூல் அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.