/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேரட் தோட்டங்களில் களையெடுப்பு பணி தீவிரம்
/
கேரட் தோட்டங்களில் களையெடுப்பு பணி தீவிரம்
ADDED : செப் 07, 2024 03:18 AM

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் கேரட் தோட்டங்களில், களை எடுப்பு பணியில், விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளான, கூக்கல்தொறை, ஈளாடா, கதவுதொறை, நெடுகுளா மற்றும் வி.ஓ.சி., நகர் உள்ளிட்ட பகுதிகளில், மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், நல்ல மழை பெய்துள்ள நிலையில், விவசாயிகள், கூடுமானவரை கடன் பெற்று, கேரட் பயிரிட்டுள்ளனர்.
இடுபொருட்கள், கூலி உயர்வு மற்றும் தோட்ட பராமரிப்பு செலவு உள்ளிட்ட செலவினங்களை கணக்கிட்டால், இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
இருப்பினும், விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், விவசாயிகள் தோட்டங்களுக்கு உரமிட்டு, களை எடுத்து, தோட்ட பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா முகமது கூறுகையில்,''கேரட்டை பொருத்தமட்டில், ஊட்டிக்கு, 1,000 கிலோ மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
நீலகிரியில் அறுவடை செய்யப்படும் கேரட், மேட்டுப்பாளையம் மண்டிகளில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ, 65 ரூபாய் வரை விற்பனையாகிறது,'' என்றார்.