/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினகுடி வனப்பகுதியில் பரவும் களை செடிகள்; விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிப்பு
/
மசினகுடி வனப்பகுதியில் பரவும் களை செடிகள்; விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிப்பு
மசினகுடி வனப்பகுதியில் பரவும் களை செடிகள்; விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிப்பு
மசினகுடி வனப்பகுதியில் பரவும் களை செடிகள்; விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிப்பு
ADDED : செப் 11, 2024 10:11 PM

கூடலுார் : மசினகுடி வனப்பகுதியில் படர்ந்து வரும் 'காசியா டோரா' என்ற களைச் செடிகளால், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனப் பகுதிகளில் எந்த பயனும் இல்லாத உண்ணி, பார்த்தீனியம் உள்ளிட்ட களைச் செடிகள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் வேறு தாவரங்கள் வளர்வதில்லை. தற்போது, பசுமைக்கு மாறியுள்ள வனப் பகுதியிலும் படர்ந்து வரும் களை செடிகளால் வன விலங்களுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இவைகளை, வனத்துறையினர் அகற்றி வருகின்றனர். ஆனாலும், அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில், மசினகுடி, சீகூர், சிங்கார வனச் சரக வனப்பகுதியில் நடப்பாண்டு, 'ஊசி தகடை' எனக் கூறப்படும், 'காசியா டோரா' செடிகள் அதிக அளவில், இடைவெளியின்றி பரவி வருகிறது. வனவிலங்குகளின் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருவதுடன், அப்பகுதியை, வன உயிரினங்கள் கடந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை விலங்குகள் உட்கொண்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
வனங்களில் பசுந்தாவரங்கள் குறைந்ததால், மான், யானை உள்ளிட்ட தாவர உண்ணிகள் உணவு தேடி, விவசாய தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. மனித-விலங்கு மோதல் அதிகரிக்க ஆபத்து உள்ளது. இந்த செடிகளை முழுமையாக அகற்ற வேண்டிய கட்டாயம் வனத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'மழையின்றி, வறட்சியின் தாக்கம் அதிகரித்தும்; பருவமழை விட்டு, விட்டு பெய்வதாலும், ஏற்படும் காலநிலை மாற்றத்தால் இந்தச் செடிகள் அதிக அளவில் வளர்கிறது. செடிகளால், எந்த பயனும் இல்லை. வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு தான் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் இந்த செடிகளை அகற்றுவதன் மூலமே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.