/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசிய கபடி போட்டியில் பங்கேற்ற மாணவருக்கு வரவேற்பு
/
தேசிய கபடி போட்டியில் பங்கேற்ற மாணவருக்கு வரவேற்பு
தேசிய கபடி போட்டியில் பங்கேற்ற மாணவருக்கு வரவேற்பு
தேசிய கபடி போட்டியில் பங்கேற்ற மாணவருக்கு வரவேற்பு
ADDED : மார் 25, 2024 12:24 AM

கூடலுார்;பீகாரில் நடந்த தேசிய இளையோர் கபடி போட்டியில், தமிழக அணியில் பங்கேற்று விளையாடிய, கூடலுார் அரசு பள்ளி மாணவருக்கு சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூடலுார், பொன்னுார் பகுதியை சேர்ந்த செல்வகுமார், ஆனந்தி தம்பதிகளின் மகன் மோகனகாந்த். இவர், பொன்னுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வாரம் பீகார் மாநிலத்தில், 16 முதல் 19ம் தேதி வரை நடந்த தேசிய இளையோர் கபடி போட்டியில், தமிழக அணியில் பங்கேற்று விளையாடி, பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
போட்டியில் பங்கேற்று நேற்று ஊர் திரும்பிய அவருக்கு, நீலகிரி கபடி வளர்ச்சி குழு, பொன்னுார், பொன்மலை கலை மற்றும் விளையாட்டு குழு, கிராம மக்கள் சார்பில் நாடுகாணி பகுதியில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்து, ஊர்வலம் நடத்தப்பட்டது.
பெற்றோர் மாணவரை, விநாயகர் கோவில் அழைத்து சென்று, பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து பள்ளி சென்ற மாணவருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர். பொன்னுார் பொன்மலை கலை மற்றும் விளையாட்டு குழு தலைவர் காளிமுத்து, செயலாளர் அருள்தாஸ், ஊர் மக்கள் பங்கேற்றனர்.

