/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்க வாலிபர் கைது
/
கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்க வாலிபர் கைது
ADDED : ஜூலை 22, 2024 02:48 AM
ஊட்டி:ஊட்டியில் கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்க வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி அலங்கார தியேட்டர் அருகில் எஸ்.ஐ., சுரேஷ்குமார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்குரிய வட மாநில வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டார். விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரோமன் தமங், 40, என்பதும், ஊட்டியில் உள்ள வால்சம் ரோடு பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.