/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காற்றோடு கலந்தவரின் கண்ணீருக்கு பதில் எங்கே? ஊட்டியில் டாக்டர்கள் கண்டன கோஷம்

ADDED : ஆக 19, 2024 01:48 AM

ஊட்டி:கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஊட்டியில் டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீலகிரியிலும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் ஊட்டியில் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். அரசு டாக்டர்கள் சங்க தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் தினேஷ், பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊட்டி சேட் மருத்துவமனையில் தொடங்கிய பேரணி, கமர்சியல் சாலை மற்றும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நிறைவடைந்தது. பேரணியின்போது உயிர் காக்கும் தேவதையின் உயிரை பறிப்பது நியாயமா, காக்க பிறந்தவளை காக்க தவறியது ஏன், காற்றோடு கலந்தவரின் கண்ணீருக்கு பதில் எங்கே, என்பது உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியபடி டாக்டர்கள் வந்தனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலக முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற டாக்டர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் முரளிதரன், குருமூர்த்தி, சிவகுமார், சுகாசினி, முகமது ஷமீர் உட்பட பலர் பங்கேற்றனர்.