/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகள் ஊருக்குள் வருவது ஏன்? தமிழக விவசாயிகள் சங்கம் விளக்கம்
/
காட்டு யானைகள் ஊருக்குள் வருவது ஏன்? தமிழக விவசாயிகள் சங்கம் விளக்கம்
காட்டு யானைகள் ஊருக்குள் வருவது ஏன்? தமிழக விவசாயிகள் சங்கம் விளக்கம்
காட்டு யானைகள் ஊருக்குள் வருவது ஏன்? தமிழக விவசாயிகள் சங்கம் விளக்கம்
ADDED : மே 29, 2024 11:23 PM
மேட்டுப்பாளையம்: காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு, சோலார் மின்வேலி காரணம் அல்ல என, தமிழக விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில், சமயபுரத்தில் துளசிராஜ் என்ற விவசாயி, 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, வாழை பயிர் செய்துள்ளார். யானைகள் ஆற்றுக்கு சென்றுவர, வழித்தடம் விட்டுள்ளார்.
யானைகளிடமிருந்து வாழைகளை பாதுகாக்க, இந்த விவசாயி சோலார் மின் வேலி அமைத்துள்ளார். இதை பார்த்த சில சமூக ஆர்வலர்கள், யானைகள் செல்லும் வழித்தடத்தில், சோலார் மின் வேலி அமைத்ததால் தான், யானைகள் ஊருக்குள் வருகின்றன என, சமூக வலைதளங்களில் செய்திகளை பதிவு செய்துள்ளனர். இது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் சாலை சமயபுரத்தில் துளசிராஜ் என்ற விவசாயி யானைகளிடம் இருந்து வாழைகளை பாதுகாக்க, சோலார் மின்வேலி அமைத்துள்ளார். மற்ற விவசாயிகளைப் போல இந்த விவசாயியும் சோலார் மின்வேலி அமைத்துள்ளார். ஆனால் இந்த மின்வேலி அமைத்ததால் தான், காட்டு யானை ஊருக்குள் வருகிறது என, சில சமூக ஆர்வலர்கள் விவசாயி மீது புகார் கூறியுள்ளனர். இந்த மின்வேலி அமைத்ததால் தான், யானைகள் ஊருக்குள் வருகிறது என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சம்பந்தப்பட்ட சமூக ஆர்வலர்கள் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறை உண்மை நிலையை அறிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தாசம்பாளையம் விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது:
சில தினங்களுக்கு முன் தென்னை மரத்தை யானைகள் கீழே தள்ளிய போது, மின்சார கம்பிகள் மீது தென்னை மரம் விழுந்தது.
உடனடியாக டிரான்ஸ்பாரத்தில் மின் இணைப்பு துண்டித்ததால், யானை உயிர் தப்பியது. எனவே யானைகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை, வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்.
விவசாய பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள் சோலார் மின் வேலி அமைத்துள்ளனர். இதை சிலர் குற்றம் என கூறுகின்றனர். எனவே வனத்துறை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயி கூறினார்.