/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் பரவலாக மழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
ஊட்டியில் பரவலாக மழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டியில் பரவலாக மழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டியில் பரவலாக மழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 14, 2024 01:45 AM

ஊட்டி:ஊட்டியில் பெய்த மழைக்கு, கல்லட்டி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு ஏப்., இறுதி வரை மழை பெய்யவில்லை. கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மே, 4ம் தேதி முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளான, கல்லட்டி, கட்டபெட்டு, கூக்கல் தொரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கல்லட்டி சாலையில் மரம் விழுந்து அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூக்கல் தொரை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
நேற்று மாலை நிலவரப்படி, ஓவேலியில் அதிகபட்சம், 45 மி.மீ., ஊட்டி, 23 மி.மீ., நடுவட்டம், 24 மி.மீ., மழை பதிவானது. பரவலாக பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.