/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடப்பமந்து பகுதியில் காட்டெருமை ; மக்கள் அச்சம்: விரட்டிய வனத்துறை
/
கோடப்பமந்து பகுதியில் காட்டெருமை ; மக்கள் அச்சம்: விரட்டிய வனத்துறை
கோடப்பமந்து பகுதியில் காட்டெருமை ; மக்கள் அச்சம்: விரட்டிய வனத்துறை
கோடப்பமந்து பகுதியில் காட்டெருமை ; மக்கள் அச்சம்: விரட்டிய வனத்துறை
ADDED : மார் 05, 2025 10:05 PM

ஊட்டி; ஊட்டி கீழ் கோடப்பமந்து பகுதியில் உலா வந்த காட்டெருமையால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
ஊட்டி -தொட்டபெட்டா இடையே, கீழ் கோடப்பமந்து பகுதி அமைந்துள்ளது. தொட்டபெட்டா வனத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில், குடியிருப்புகளுக்கு நடுவே, மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள், அடிக்கடி கோடப்பமந்து குடியிருப்பு பகுதியில் நடமாடுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோத்தகிரி பிரதான சாலையில் இருந்து இறங்கிய காட்டெருமை, திடீரென குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால், மக்கள் அச்சம் அடைந்து, வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டியதை அடுத்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் மலை காய்கறி அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதால், மேய்வதற்காக வரும் காட்டெருமைகள் பயிர்களை சேதம் செய்து வருகின்றன. திடீரென, நடைபாதையில் அங்கும் இங்கும் ஓடுவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.