ADDED : மே 15, 2026 01:30 PM

அ நிறம் | அளவு
மஞ்சூர்: மஞ்சூர் அருகே காட்டெருமை நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
மஞ்சூர் அருகே ஓணிக்கண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டத்தை ஒட்டி , அடர்ந்த வனப்பகுதி உள்ளது. பசுந்தேயிலை பறிக்க பெண் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஓணிக்கண்டி, அண்ணாநகர், காமராஜநகர், பெள்ளத்திகம்பை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் கிராம மக்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள் தேயிலை தோட்ட வழியாக நடந்து செல்கின்றனர். சமீபகாலமாக இங்கு உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் , தோட்ட தொழிலாளர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறை ஊழியர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு காட்டெருமை வனத்துக்கு விரட்ட வேண்டும்.
