தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையில் ஓட்டம் பிடித்த காட்டெருமை வாகன ஓட்டிகள் திணறல்

சாலையில் ஓட்டம் பிடித்த காட்டெருமை வாகன ஓட்டிகள் திணறல்

சாலையில் ஓட்டம் பிடித்த காட்டெருமை வாகன ஓட்டிகள் திணறல்


ADDED : மே 27, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலக சாலையில் காட்டெருமை சுற்றித்திரிந்ததால் பாதசாரிகள்; வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஊட்டி நகர் பகுதியில் சமீபகாலமாக காட்டெருமைகள் சுற்றி வருவது அதிகரித்துள்ளது. நேற்று காலை கலெக்டர் அலுவலக அருகே, பிங்கர் போஸ்ட் சாலையில் உலா வந்த ஒற்றை காட்டெருமை திடீரென சாலையில் ஓடியது. காட்டெருமை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை தாறுமாறாக இயக்கி விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டது.

உடனே அப்பகுதிக்கு போலீசார், வனத்துறையினர் வந்து காட்டெருமையை வனத்திற்குள் விரட்டும் வகையில், பின் தொடர்ந்து சென்றனர். ஆனால், அங்கும் இங்குமாக ஓடி அச்சுறுத்திய காட்டெருமை திடீரென அருகில் இருந்த குடியிருப்பு வழியாக மலை காய்கறி தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us