தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வனத்துறை வாகனத்தை தாக்கிய காட்டு யானை

வனத்துறை வாகனத்தை தாக்கிய காட்டு யானை

வனத்துறை வாகனத்தை தாக்கிய காட்டு யானை


ADDED : ஜூலை 14, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 06:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்: பந்தலுார் அருகே பாக்கனா பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனத்துறை ரோந்து வாகனத்தை காட்டு யானை தாக்கியது.

பந்தலுார் அருகே பாக்கனா பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஒற்றை யானை ஊருக்குள் வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பிதர்காடு வனத்துறையினர், ரோந்து வாகனத்தில் சென்று குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு மத்தியில் உலா வந்த, யானையை சப்தம் எழுப்பி விரட்டி உள்ளனர்.

அப்போது, பின்னோக்கி சென்ற யானை, திடீரென ஆக்ரோஷம் அடைந்து ரோந்து வாகனத்தின் முன்பக்கத்தை தாக்கியது. அதில், வாகனத்தின் முகப்பு பகுதி முழுமையாக சேதம் அடைந்தது.

வாகனத்தில் இருந்த வனக்குழுவினர், மீண்டும் சப்தம் எழுப்பி யானையை விரட்டியதால், யானை சென்றது. இதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

வனத்துறையினர் கூறுகையில், ‘பொதுமக்கள் இப்பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டும். வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us