/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீரபாண்டிபுதுாரில் காட்டு யானைகள் நடமாட்டம்
/
வீரபாண்டிபுதுாரில் காட்டு யானைகள் நடமாட்டம்
ADDED : ஏப் 23, 2024 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;மருதமலை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த, 10க்கும் மேற்பட்ட யானைகள் சின்னதடாகம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி சுற்றி வருகிறது.
நேற்று முன்தினம் வீரபாண்டி புதூரில் உள்ள தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை, வாழை, பாக்கு மரங்களை வேரோடு பிடுங்கி வீசி சேதப்படுத்தியது.
சின்னதடாகம் வட்டாரத்தில் கூட்டம் கூட்டமாக திரியும் காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

