sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

500 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் விவசாயம், சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்: முருகன் உறுதி

/

500 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் விவசாயம், சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்: முருகன் உறுதி

500 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் விவசாயம், சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்: முருகன் உறுதி

500 நாட்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் விவசாயம், சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம்: முருகன் உறுதி


ADDED : ஏப் 18, 2024 04:55 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாமரையின் மலர்ச்சி; நீலகிரியின் வளர்ச்சி, என்ற பெயரில், '59 வாக்குறுதிகளை, 500 நாட்களில் நிறைவேற்றுவேன்,' என்ற உறுதியுடன், நீலகிரி லோக்சபா தொகுதிக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கையை தொகுதியின் வேட்பாளர் முருகன் ஊட்டியில் வெளியிட்டார்.

அதன் முழுமையான சாராம்சம் இதோ...!

உட்கட்டமைப்பு வசதிகள்


l ஊட்டியில் சர்வதேச தரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் உருவாக்கப்படும். இதன் மூலம், தொழில்துறையில் முன்னேற்றம் அடைவதுடன், அரசு மற்றும் கல்வி ஆகியவற்றின் பிணைப்பு வலுப்படுத்தப்படும்.

l நீலகிரி மாவட்டத்தில் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்புமின்றி, உலகத் தரத்தில் சுற்றுலா மையம் மற்றும் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

l ஊட்டியில் திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, திரைப்பட நகரம் அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்.

l ஊட்டி காந்தள் பகுதியில், நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.

l நீலகிரி மாவட்ட மக்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் விதமாக, எச்.பி.எப்., தொழிற்சாலையானது நவீன தொழிற் பூங்காவாக அமைத்து தரப்படும்.

l நீலகிரியில் மின் இணைப்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் குடிநீர் வழங்க 'ஜல்ஜீவன்' திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

l மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு, வெளிவட்ட சாலை அமைத்து தீர்வு காணப்படும். அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை விரிவாக்க பணிகளும் தொடங்கப்படும்.

l ஊட்டி நகர் பகுதியில் சுற்றுலா வரும் வாகனங்களை முறையாக நிறுத்துவதற்கான, 'மல்டி லெவல்' பார்க்கிங் தளம் அமைக்கப்படும்.

விவசாய மேம்பாடு


l அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இத்திட்டத்திற்குள் சேர்க்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அரசு குளிர்பதன கிடங்குகள் அமைத்து தரப்படும்.

l நீலகிரி மாவட்டத்தின் பிரதான பயிரான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு தேயிலை விவசாயிகளின் துயர் துடைக்கப்படும்.

l நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் மூலிகை மற்றும் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் சாகுபடி செய்யப்படும். நிலக்கடலை, பாக்கு மற்றும் செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெறப்படும்.

l நெடுங்காலமாக கிடப்பில் இருக்கும் பாண்டியர் --புன்னம்புழா, பவானி ஆற்றுடன் இணைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

இளைஞர்கள் நலனுக்கு முக்கியத்துவம்


l நீலகிரியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் மூலம் தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்.

l தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி, வழிகாட்டுதல்கள், கடன்/முதலீட்டு உதவி வழங்கும் 'ஸ்டார்ட் அப் இந்தியா' கிளை மையம் அமைக்கப்படும்.

l மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். அவிநாசி பகுதியில் ஜவுளி சந்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் நலன் மகளிருக்கானஅரசு கலைக்கல்லுாரி கொண்டு வரப்படும்.

l மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்வு மேம்பட ஆவன செய்யப்படும். கிராமப்புற பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, குறைந்த விலையில் 'சானிட்டரி நாப்கின்கள்' வழங்குவதற்கு உறுதி செய்யப்படும்.

எளியோர் நலன்பாதுகாப்பு


l படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

l குடிசை வீடுகளில் குடியிருந்து வரும் நபர்களுக்கு 'ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம் புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

l நீலகிரி தொகுதிக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்படும் விதமாக 'நவோதயா பள்ளிகள்' அமைத்து தரப்படும்.

l பவானிசாகர் மற்றும் சிறுமுகை பகுதி மீனவர்கள் அனைவருக்கும் 'ஆவாஸ் யோஜனா' வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும்.

l மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், 24 மணி நேர தீவிர அவசர சிகிச்சைப் பிரிவு அமைத்து தரப்படும். அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு, 24 மணி நேர தீவிர அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

l நீலகிரியில் வன-விலங்கு மனித மோதலை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும். மேலும், இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்யப்படும். கூடலுார் மக்களின் செக்ஷன்- 17 பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

l நீலகிரியில் சுற்றுலா மேம்பாட்டிற்காக 'ெஹலி ஆம்புலன்ஸ்' என்கிற மத்திய சுற்று லாத்துறை அலுவலகத்தை ஊட்டியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us