/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
2 நாளில் திறப்பு விழாவிற்கு தயாராகுமா புதிய கட்டடம்
/
2 நாளில் திறப்பு விழாவிற்கு தயாராகுமா புதிய கட்டடம்
2 நாளில் திறப்பு விழாவிற்கு தயாராகுமா புதிய கட்டடம்
2 நாளில் திறப்பு விழாவிற்கு தயாராகுமா புதிய கட்டடம்
ADDED : ஜூன் 05, 2024 09:51 PM

மேட்டுப்பாளையம் : புதிதாக கட்டப்பட்டு வரும், வட்டார அளவிலான ஆய்வக கட்டடம் இரண்டு நாளில் திறப்பு விழாவுக்கு தயாராகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரமடை வட்டாரத்தில் சின்னகள்ளிப்பட்டி உள்ளிட்ட ஆறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தலைமை இடமாக, காரமடையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, 50 லட்சம் ரூபாய் செலவில் வட்டார அளவிலான ஆய்வக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த வளாகத்தில், 23 லட்சம் ரூபாய் செலவில், செவிலியர் குடியிருப்பு ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருகிற எட்டாம் தேதி தமிழக மக்கள் நல்வாழ்வு சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன், கோவை வர உள்ளார். இவர் கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்று, புதிய கட்டடங்களை திறந்து வைக்க உள்ளார்.
இதில் வட்டார அளவிலான ஆய்வக கட்டடம், செவிலியர் குடியிருப்பு ஆகிய இரண்டையும் இணைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் கட்டட பணிகள், முடியாமல் உள்ளது. பணிகள் அனைத்தும் முடித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்திடம் ஒப்படைத்த பின் தான், விழாவில் சேர்க்க முடியும் என்ற நிலை உள்ளது. விழாவுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால், அதற்குள் பணிகள் முடிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருந்த போதும், அமைச்சரை விழாவிற்கு அழைத்து, கட்டடத்தை திறந்து வைக்க அரசு அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பணிகளை விரைவாக செய்து முடிக்கும்படி, அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் கூறியுள்ளனர்.