/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம சபை கூட்டம் நடக்குமா! ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பு
/
கிராம சபை கூட்டம் நடக்குமா! ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பு
கிராம சபை கூட்டம் நடக்குமா! ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பு
கிராம சபை கூட்டம் நடக்குமா! ஊராட்சி மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 13, 2024 11:28 PM
பெ.நா.பாளையம் : கிராம சபை கூட்டம் ஊராட்சிகளில் விரைவில் நடத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், மே 1ல் நடத்த வேண்டிய கிராம சபை கூட்டத்தை, ஜூன் மாதம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால், இதுவரை அதற்கான எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அனைத்து ஊராட்சிகளிலும் ஜன., 26, குடியரசு தினம், மார்ச், 22, உலக தண்ணீர் தினம், மே, 1, தொழிலாளர் தினம், ஆக., 15, சுதந்திர தினம், அக்., 2, காந்தி பிறந்த நாள், நவ.,1, உள்ளாட்சிகள் தினம் ஆகிய, 6 நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கூட்டங்களில் ஊராட்சி வரவு, செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படும். அரசு திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மக்கள் தங்கள் ஊராட்சியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கைகள் வைப்பர். அதன் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
கடந்த மே, 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை என, தமிழக அரசு தெரிவித்தது.
கடந்த மே, 1ம் தேதி நடத்தப்பட வேண்டிய கிராம சபை கூட்டம் ஜூன் மாதம் நடக்கும் என, தகவல் வெளியானது. கடந்த, 6ம் தேதி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெறப்படுவதாக, தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆனால், இதுவரை தமிழக அரசு கிராம சபை கூட்டம் தொடர்பான எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' இம்மாத இறுதியில் அல்லது ஜூலை மாத துவக்கத்தில் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவு பிறப்பிக்கலாம்' என, நம்பிக்கை தெரிவித்தனர்.