/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை துரத்தியதில் பெண் காயம் மருத்துவமனையில் சிகிச்சை
/
யானை துரத்தியதில் பெண் காயம் மருத்துவமனையில் சிகிச்சை
யானை துரத்தியதில் பெண் காயம் மருத்துவமனையில் சிகிச்சை
யானை துரத்தியதில் பெண் காயம் மருத்துவமனையில் சிகிச்சை
ADDED : ஜூன் 12, 2024 09:50 PM
பந்தலுார், - பந்தலுார் அருகே சேரங்கோடு டான்டீ பகுதியில் யானையிடமிருந்து உயிர்தப்பிய பெண் எலும்பு முறிவுடன், கேரளா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பந்தலுார், சேரங்கோடு 'டான்டீ' தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு இரு யானைகள் சென்றுள்ளன.
திடீரென வீடுகளுக்கு முன்பாக யானை இரண்டும் வந்ததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளுக்குள் ஓடினர். அப்போது, மல்லிகா,53, என்பவரை யானை துரத்தி தாக்க முற்பட்டபோது, அவர் யானையிடம் இருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்தார்.
அருகில் இருந்தவர்கள் சப்தமிட்டு யானையை வேறு பகுதிக்கு துரத்தியதுடன், காயத்துடன் இருந்த மல்லிகாவை, அரசு மருத்துவமனை கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக, கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கீழே விழுந்ததில் எலும்பு உடைந்துள்ளதால் உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன், யானைகள் நடமாட்டம் குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.
மக்கள் கூறுகையில்,' யானையால் காயமான பெண்ணுக்கு வனத்துறை உதவி வழங்க வேண்டும்,' என்றனர்.