/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் பெண் பாலியல் பலாத்காரம்; கும்பலை தேடும் போலீசார்
/
ஊட்டியில் பெண் பாலியல் பலாத்காரம்; கும்பலை தேடும் போலீசார்
ஊட்டியில் பெண் பாலியல் பலாத்காரம்; கும்பலை தேடும் போலீசார்
ஊட்டியில் பெண் பாலியல் பலாத்காரம்; கும்பலை தேடும் போலீசார்
ADDED : ஆக 08, 2024 12:36 AM

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த, 40 வயது பெண் திருமணம் ஆகி, கணவரை பிரிந்து வாழ்கிறார். மகன், மகள் உள்ளனர். அந்த பெண் நகரில் உள்ள ஒரு கடையில் பணிபுரிகிறார்.
தினசரி காலை, 10:00 மணிக்கு வேலைக்கு வந்துவிட்டு இரவு, 8:00 மணிக்கு மேல், வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் பணி முடிந்து, ஊட்டி மரவியல் பூங்கா அருகே உள்ள சாலையில் சென்றபோது, வாலிபர்கள் சிலர் வழிமறித்து அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், கூச்சலிட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை.
அந்தப் பெண் போராடி பார்த்தும் அவர்களிடமிருந்து தப்ப முடியவில்லை. அந்த கும்பல் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியது. பின், அந்த பெண் மொபைல் போனில் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடலில் காயங்களுடன் தவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்படி, போலீசார், சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று, பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.