sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேர் திருவிழாவில் தாலப்பொலி ஏந்தி பெண்கள் பங்கேற்பு

/

தேர் திருவிழாவில் தாலப்பொலி ஏந்தி பெண்கள் பங்கேற்பு

தேர் திருவிழாவில் தாலப்பொலி ஏந்தி பெண்கள் பங்கேற்பு

தேர் திருவிழாவில் தாலப்பொலி ஏந்தி பெண்கள் பங்கேற்பு


ADDED : மார் 09, 2025 10:51 PM

Google News

ADDED : மார் 09, 2025 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் புளியாம்பாறை ஸ்ரீ ஆயிரம் வில்லி கோவில் தேர் திருவிழாவில் பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர்.

கூடலுார் புளியம்பாறை ஸ்ரீ ஆயிரம் வில்லி பகவதி கோவில் தேர் திருவிழா, 7ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. 11:00 மணிக்கு பெரிய வீடு வண்ணார குடியிலிருந்து இளநீர் பூங்குழல் ஊர்வலம் துவங்கி கோவிலை வந்தடைந்தது.

மாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 6:00 மணிக்கு தீபாதாரணை, அத்தாழ பூஜையும், நேற்று முன்தினம், காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், வழிபாட்டு பூஜைகள், 11:00 மணிக்கு அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும், 2:00 மணிக்கு காணிக்கை பொருட்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது.

இரவு, 8:00 மணிக்கு, கட்டி கொல்லி பகவதி அம்மன் கோவிலில் இருந்து, செண்டை மேளம், சிங்காரி மேளம் இசையுடன் தேர் ஊர்வலம் தொடங்கியது. பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர்.

தேர் ஊர்வலம் புளியம்பாடி வழியாக சென்று கோவிலை அடைந்தது. நேற்று, காலை, 7:00 மணிக்கு உஷபூஜை, வழிபாடு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us