/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் மகளிர் ஆட்சி! நிர்வாக பணிகளில் பெண் உயர் அதிகாரிகள் நியமனம்; வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைக்க மக்களும் தயார்
/
மலையில் மகளிர் ஆட்சி! நிர்வாக பணிகளில் பெண் உயர் அதிகாரிகள் நியமனம்; வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைக்க மக்களும் தயார்
மலையில் மகளிர் ஆட்சி! நிர்வாக பணிகளில் பெண் உயர் அதிகாரிகள் நியமனம்; வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைக்க மக்களும் தயார்
மலையில் மகளிர் ஆட்சி! நிர்வாக பணிகளில் பெண் உயர் அதிகாரிகள் நியமனம்; வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைக்க மக்களும் தயார்
ADDED : ஆக 14, 2024 09:09 PM

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், கலெக்டர் முதல் முக்கிய அரசு துறையில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிர்வாக பணிகள் நடந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார், குந்தா, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் ஆகிய, 6 தாலுக்காக்களை உள்ளடக்கியதாக உள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மூன்று மாநில எல்லையை இங்கு உள்ளன. சர்வதேச சுற்றுலா அந்தஸ்து பெற்ற இம்மாவட்டத்திற்கு ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இரண்டாவது சீசன் சமயங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் அதிகளவில் வருகை தருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரியின் பசுமையை பாதுகாத்து கொள்ள இம்மாவட்ட மக்களுக்கும் உறுதுணையாக இருக்க, இங்கு வரும் அனைத்து அரசு துறை அதிகாரிகளின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
முக்கிய துறைகளில் பெண் அதிகாரிகள்
இந்நிலையில், தற்போது மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா பதவி வகித்து வருகிறார். இங்குள்ள சட்ட - ஒழுங்கு பிரச்னைக்கு அரணாக இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவது போலீஸ் துறையாகும். அந்த துறையின் பெண் எஸ்.பி.,யாக நிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
மலை மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பங்காக உள்ளது. விவசாயம் செழித்து ஓங்கும் வகையில், அத்துறையில் தோட்டக்கலை துறை இணை இயக்குனராக சிபிலா மேரி பணிபுரிந்து வருகிறார்.
அனைவரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருப்பது கல்வியாகும். கல்வியை மேம்படுத்தி மெருகேற்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக கீதாவும், ஊட்டி அரசு கலைக்கல்லுாரி முதல்வராக ராமலட்சுமியும் பணிபுரிகின்றனர்.
அனைவரின் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது மருத்துவ துறை. அந்த வகையில் , ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் டீன் பதவியில் கீதாஞ்சலி உள்ளார்.
மலையில் மகளிர் ஆட்சி
பொதுமக்கள் கூறுகையில், 'நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும் சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மாவட்ட நிர்வாக பொறுப்பு, போலீஸ் துறை, கல்வி, மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பெண் அதிகாரிகள் நிர்வாக பணி மேற்கொண்டு வருவது பெருமையாக உள்ளது. நம்நாடு, 78 வத சுதந்திரன தினத்தை கொண்டாடும் வேளையில், நீல மலையில் ஆட்சி புரியும் மகளிர் அதிகாரிகள் கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களுக்கு, பொதுமக்களும் ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம்,' என்றனர்.