/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகளிர் சுய உதவி குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு
/
மகளிர் சுய உதவி குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு
ADDED : மார் 28, 2024 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி, : தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, இளைஞர்கள் உட்பட, தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களும், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, 'செல்பி ஸ்பாட்; என் ஓட்டு - என் உரிமை, கோல்ப் போட்டிகள்,' என, பல்வேறு வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஊட்டி தாவரவியல் பூங்காவில், 50 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் 50 அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு, கும்மி பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சி மூலம், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.