ADDED : ஜூன் 23, 2026 09:22 PM

அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி கேசினோ சந்திப்பிலிருந்து, பிரீக்ஸ் பள்ளி வழியாக ஸ்பென்ஷர் சாலை வரை சாலையோரம் நுாற்றாண்டு பழமைவாய்ந்த அபாயகரமான கற்பூர மரங்கள் உள்ளது.
இப்பகுதியில், பிரீக்ஸ் பள்ளி, ஓட்டல் தமிழ்நாடு, சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் இருப்பதால் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள அபாயகரமான மரங்களால் இச்சாலையில் செல்லும் பாதசாரிகள் , பள்ளி குழந்தைகள் , வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களை அகற்ற பல்வேறு தரப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தி வந்தனர்.
தற்போது, அப்பகுதியில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணி துவங்கியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
