ADDED : ஆக 22, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி:கோத்தகிரி அருகே, மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, மரம் விழுந்து பலியானார்.
நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி பகுதியில் அபாயகரமான மரங்கள் வெட்டும் பணி நடந்து வருகிறது. இதில், 20 தொழிலாளர்கள் உள்ளனர். கோத்தகிரி கடசோலை பகுதியைச் சேர்ந்த அழகு சுந்தரம், 35, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது மரம் விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த, அழகு சுந்தரத்துக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் ஆறு மற்றும் மூன்று வயதில் உள்ளனர்.
சோலுார்மட்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.