ADDED : ஜூன் 23, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரங்கோடு டான்டீ பகுதியில், தேயிலை பறித்த போது பாம்பு கடித்த பெண் தொழிலாளி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சேரங்கோடு டான் டீ பகுதியில், தேயிலை பறித்த தொழிலாளி அமுதா,54, என்பவரின் கையை பாம்பு கடித்தது. உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால், சக தொழிலாளர்கள், ‘தாங்கள் தேயிலை பறிக்கும் தோட்டத்தில், புதர்கள் மற்றும் புற்களை அகற்றினால் மட்டுமே பணிக்கு செல்வோம்,’ என்றனர். தொடர்ந்து, நல்ல நிலையில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு தொழிலாளர்கள் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
