தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 26, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 10:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில், 10 முதல் 15 ஆண்டுகளாக, டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ‘ரெஸ்ட் டியூட்டி’ வழங்குவதாக கூறி, அந்த பஸ்களில் இருந்து இறக்கிவிட்டு, அதற்கு பதிலாக, 550 ரூபாய் தினக்கூலி அடிப்படையில், தற்காலத பணியாளர்களுக்கு பணி வழங்கப்படுகிறது.

அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கையை, எல்.பி.எப்.,– சி.ஐ.டி.யூ.சி.,– ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யூ.சி., உட்பட பல்வேறு தொழிற் சங்கங்கள் கண்டித்துள்ளன. ‘இத்தகைய நடவடிக்கையை கைவிட்டு, பழைய முறையை தொடர வேண்டும்,’ என வலியுறுத்தி, அரசு போக்குவரத் கழக அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தொழிற்சங்க நிர்வாகிகள்; போக்குவரத்து கழக ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us