/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:39 பேர் கைது
/
ஊட்டியில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:39 பேர் கைது
ADDED : ஜூன் 11, 2024 01:42 AM
ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலக முன், 'ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட, 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்துக்கு, சங்க தலைவர் ஆபிரகாம் தலைமை வகித்தார். சங்க செயலாளர் மூர்த்தி மற்றும் கவுரவ தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், 'கடந்த, 2018ம் ஆண்டு முதல், ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் எங்களுக்கு, வழங்கி வந்த பாதி சம்பளம் கூட, தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடன் பேசி 'செட்டில்மென்ட்' முடிக்காமல் உள்ளது.
தற்போது, நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதுடன், அமெரிக்காவை சேர்ந்த ஒரு கம்பெனி, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதனால், 170 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் நலன் கருதி, எங்களுக்கு கிடைக்க வேண்டிய பண பலன்களை வழங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கோஷம் எழுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து, 39 பேர் கைது செய்யப்பட்டனர்.