தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


ADDED : ஜூலை 07, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 08:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: மேல்கூடலுார் அருகே, நிலுவை சம்பளம் கேட்டு தனியார் எஸ்டேட் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேல்கூடலுார் சில்வர் கிளவுட் அருகே உள்ள, தனியார் எஸ்டேடில் பணிபுரிந்து வரும் தற்காலிக தொழிலாளர்களுக்கு வாரம் தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கடந்த மூன்று வாரமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், ‘நிலுவை சம்பளத்தை வழங்கவும், நிரந்தர தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள போனஸ் உள்ளிட் பணப்பலன்கள் வழங்க வேண்டும்,’ என, வலியுறுத்தி, ஏ.ஜ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் நேற்று தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில், தீர்வு ஏற்படவில்லை. தொடர்ந்து, வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில்,‘இந்த பிரச்னை தொடர்பாக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பேசி தீர்வு காணப்படும்,’ என, தெரிவிக்கப்ப்டடது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us