/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளம் பெண்களுக்கான பயிலரங்கம்; பயன் பெற அறிவுரை
/
இளம் பெண்களுக்கான பயிலரங்கம்; பயன் பெற அறிவுரை
ADDED : ஜூன் 23, 2024 11:21 PM
கோத்தகிரி;கோத்தகிரியில் இளம் பெண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய செயல்பாட்டு குழுக்களுக்கான பயிலரங்கம் நடந்தது.
கோத்தகிரி கேர் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் வினோபா தலைமை வகித்தார்.
மாவட்ட தொழில் நெறிமுறை அலுவலர் கஸ்துாரி, மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் திலகவதி, ெபாறியாளர் சுஜித், மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவை ேசர்ந்த கஜலட்சுமி மற்றும் வக்கீல் இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
அதில், 'பெண்களுக்கான உயர் கல்வி, அரசாங்க தேர்வுகள் எழுதும் முறைகள், பெண்கள் தொழில முனைவர்களாக மாற தேவைப்படும் கடன் உதவிகள் பெறுவது, அரசாங்க திட்டங்களை பெறுவது, பெண்களின் பாதுகாப்பு மற்றும் இலவச சட்ட உதவி மையத்தின் சேவைகள் பெறுவது குறித்து,' விளக்கம் அளிக்கப்பட்டது. 50 பேர் பங்கேற்றனர்.