/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு யோகா பயிற்சி
/
மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு யோகா பயிற்சி
ADDED : ஆக 19, 2024 01:38 AM
ஊட்டி;மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
போலீசார் உடல்நிலையை சரியாக வைத்து கொள்ளவும், பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும், வாரந்தோறும் சனிக்கிழமை உடற்பயிற்சி, நடைபயிற்சி அல்லது யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மன அழுத்தத்தை தவிர்ப்பதற்காக, ஊட்டியில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், எஸ்.பி., நிஷாவும் பங்கேற்று யோகா செய்தார்.
போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'போலீஸ் துறையில் பல இடங்கள் காலியாக உள்ளன. இதனால், மற்ற போலீசாருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதுபோல், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் போது, அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. மேலும், போலீசாருக்கு வார விடுமுறையை சரியாக அளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.