/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை... ஒரு போதும் நினைக்க கூடாது! உலக போதை தடுப்பு நிகழ்ச்சியில் விழிப்புணர்வு
/
இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை... ஒரு போதும் நினைக்க கூடாது! உலக போதை தடுப்பு நிகழ்ச்சியில் விழிப்புணர்வு
இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை... ஒரு போதும் நினைக்க கூடாது! உலக போதை தடுப்பு நிகழ்ச்சியில் விழிப்புணர்வு
இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை... ஒரு போதும் நினைக்க கூடாது! உலக போதை தடுப்பு நிகழ்ச்சியில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 26, 2024 12:19 AM

ஊட்டி;'இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை ஒரு போதும் நினைக்க கூடாது,' என, உலக போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போதையால் குடும்பம் சீரழியும்
அதில், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மனநல மருத்துவர் விவேக் பேசியதாவது:
நமக்கு போதை பொருள் பழக்கம் ஏற்பட்டால் உடல் நலத்தை இழந்துவிடுகிறோம். சமுதாயத்தில் மரியாதை இருக்காது; குடும்பம் சீரழியும்; குடும்பத்தாரிடம் பாசம் இருக்காது, எந்த வேலையும் செய்ய முடியாது. நீங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் ஒரு சதவீதம் கூட இருக்க முடியாது. சரியாக படிக்க முடியாது. வாழ்க்கையே அழிந்து விடும்.
இதனால் ஏற்படும் கோபத்தில் தங்களை காயப்படுத்துவது, மற்றவர்களையும் காயப்படுத்தும் சூழ்நிலை உருவாகும். போதை பொருள் பழக்கத்தால் பலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. எனவே, இளைய சமுதாயம் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை ஒரு போதும் நினைக்க கூடாது. இவ்வாறு, அவர் பேசினார்.
போதை இல்லா சமுதாயம் வேண்டும்
மாவட்ட கலெக்டர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற சில அதிகாரிகள் பேசியதாவது:
பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் சக மாணவன் தவறான வழியில் செல்கிறார் என்று தெரிய வந்தால், உடனே ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பர்.
அடுத்தடுத்து ஓடி கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். யாருக்கும் பொறுமை இல்லை. இந்த சூழ்நிலையில் வாழ்கின்ற வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மாணவர்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்களுக்கு அடிமையாக வேண்டுமே தவிர, போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிவிடக்கூடாது. போதை இல்லா சிறப்பான நல்ல சமுதாயம் உருவாக இளைய சமுதாயத்தினரின் பங்கு அவசியம். இவ்வாறு அவர்கள் பேசினர்.
தொடர்ந்து, போதை பொருள்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்தும், போதையில்லா தமிழகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்தும், மாணவர்கள் சார்பில் நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மேலும், போதை பொருள் விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவர்களிடையே பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டி, கவிதைப்போட்டி, பாட்டுபோட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு போலீசார் பரிசு வழங்கினார்கள்.