/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் முதியவரை அடித்து கொன்ற வாலிபர் கைது
/
ஊட்டியில் முதியவரை அடித்து கொன்ற வாலிபர் கைது
ADDED : மார் 06, 2025 09:31 PM

ஊட்டி; ஊட்டி அடுத்த தங்காடு ஓரநள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்,67. இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர், ராமலிங்கம் ஊட்டியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மெயின் பஜார் பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்வதற்கு வழி தெரியாமல் அந்த பகுதியில் நின்று உள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரிடம் பஸ் நிலையம் செல்வதற்கு வழி கேட்டுள்ளார். அந்த வாலிபர் முதியவரை, ஏ.டி.சி., வழியாக அழைத்து சென்று, 'மது குடிக்க எனக்கு பணம் தர வேண்டும்,' என, மிரட்டி உள்ளார். 'ராமலிங்கம் பணம் தர முடியாது,' என, மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் ராமலிங்கத்தை சரமாரியாக தாக்கி கீழே தள்ளி விட்டு சென்றுள்ளார்.
மயங்கி கிடந்த ராமலிங்கத்தை ஒருவர் மீட்டு சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, ஊட்டி மேல் தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்த சாந்தகுமார்,26, என்பவரை பிடித்தனர். இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, கொலை வழக்கு பதிவு செய்து, சாந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.