/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் கைது
/
பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் கைது
ADDED : மார் 07, 2025 09:53 PM
ஊட்டி; ஊட்டி காந்தள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து இவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த நேரத்தில் வாலிபர் ஒருவர் இவரது கழுத்தில் இருந்த செயினை பறித்து தப்பி ஓடி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் சப்தம் போட்டார். தொடர்ந்து அருகில் இருந்த கடைக்காரர்கள் விரட்டி சென்று, அப்பர் பஜார் பகுதியில் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த அபின் ஷாகுல்,21, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் கூறுகையில், 'அந்த நபர் பறித்த செயின் தங்கம் இல்லை; கவரிங் செயின்,' என்றனர்.