/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கத்தியால் வெட்டிய இளைஞர்கள் தலைமறைவு
/
கத்தியால் வெட்டிய இளைஞர்கள் தலைமறைவு
ADDED : செப் 10, 2024 02:42 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே கிராமத்தை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளியின் மகள் பிளஸ்----2 முடித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் அனைவரும் இருந்தபோது, அவரின் மொபைல் போனுக்கு மெசேஜ் வந்துள்ளது.
அதனை பார்த்த தந்தை மகளை கண்டித்ததுடன், மெசேஜ் அனுப்பியவரை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். அதில், வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நேரடியாக வந்த, 23 வயது இளைஞர் அங்கிருந்த கத்தியை எடுத்து மாணவியின் தந்தையின் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளார். அதனையடுத்து தாயின் தலையிலும் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த தாய், ஊட்டி அரசு மருத்துவமனையிலும், தந்தை கூடலுார் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சேரம்பாடி போலீசார் தலைமறைவான, இரு இளைஞர்களை தேடி வருகின்றனர்.

