/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் 10 நாட்கள் மூன்றாவது புத்தக திருவிழா; ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
/
ஊட்டியில் 10 நாட்கள் மூன்றாவது புத்தக திருவிழா; ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
ஊட்டியில் 10 நாட்கள் மூன்றாவது புத்தக திருவிழா; ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
ஊட்டியில் 10 நாட்கள் மூன்றாவது புத்தக திருவிழா; ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
ADDED : அக் 15, 2024 09:58 PM
ஊட்டி : ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இம்மாதம், 18ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை, 10 நாட்கள் மூன்றாவது புத்தக திருவிழா நடக்கிறது.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, இலவச மின் இணைப்பு, இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமை தொகை, அபாயகரமான மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, 130 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், 'ஆயுஷ்மான் பாரத்' பிரதம மந்திரி காப்பீடு திட்டம் துவங்கி ஆறு ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, 'மாவட்டத்தில் சிறப்பாக சிகிச்சை அளித்த, 5 மருத்துவமனை, 2 டாக்டர்கள், 2 தொடர்பு அலுவலர்கள் மற்றும் 2 வார்டு மேலாளர்கள்,' என, மொத்தம், 11 நபர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தவிர, காப்பீட்டு திட்ட அடையாள அட்டை ஒரு நபருக்கு வழங்கப்பட்டது. காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று பயனடைந்த, 2 நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில், 3 முன்னாள் படை வீரர்களின் சார்ந்தோர்களின் மேற்படிப்பிற்கு கல்வி மேம்பாட்டு மானிய நிதியாக ஒரு லட்சத்திற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஊட்டியில், இம்மாதம், 18ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் மூன்றாவது புத்தக திருவிழாவை முன்னிட்டு ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை கலெக்டர் ஒட்டி விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட அரசு துறை அலவலர்கள் பங்கேற்றனர்.