UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
பந்தலூர்: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கொட்டை அரிசியை, சமைக்க முயன்ற ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
பந்தலூர் பஜாரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி மணிகண்டன் தலைமை வகித்தார். கொட்டை அரிசியை பாத்திரத்தில் வேக வைக்க முயன்ற போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதனை தடுத்து பாத்திரம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். தரையில் படுத்து, த.வெ.க. அரசின் செயல்பாட்டுக்கு எதிராக விசில் ஊதி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
