/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போதை ஓட்டுனரின் உரிமத்துக்கு 10 ஆண்டு தடை; ஆர்.டி.ஓ., அதிரடி
/
போதை ஓட்டுனரின் உரிமத்துக்கு 10 ஆண்டு தடை; ஆர்.டி.ஓ., அதிரடி
போதை ஓட்டுனரின் உரிமத்துக்கு 10 ஆண்டு தடை; ஆர்.டி.ஓ., அதிரடி
போதை ஓட்டுனரின் உரிமத்துக்கு 10 ஆண்டு தடை; ஆர்.டி.ஓ., அதிரடி
ADDED : மார் 07, 2024 11:34 AM
ஊட்டி:ஊட்டியில், அரசு போக்குவரத்து கழக ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமத்துக்கு, 10 ஆண்டுகள் தற்காலிகமாக தடை செய்து, ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த சத்தியராஜ், இவர் ஊட்டி மண்டலம் மேட்டுப்பாளையம் கிளை-2ல் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். வழித்தடத்தில் பஸ் இயக்கும் போதே மது அருந்தி விட்டு பஸ் இயக்கி உள்ளார். பல முறை பணிக்கு வராமல் இருந்துள்ளார்.
பயணிகளின் புகாரை அடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, பணியின் போது போதையில் இருந்ததை உறுதிபடுத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொது மேலாளரிடம் அறிக்கை சமர்பித்தனர்.
பொது மேலாளர் நடராஜ் கூறுகையில், ''சத்தியராஜ் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டதில், 5 முறை பணியின் போது மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. கடந்த மூன்று மாதம் இவருக்கு பணி வழங்கவில்லை. எனினும், இவர் திருந்தி வருவதாக தெரியவில்லை. பயணிகளின் நலன் கருதி, நடவடிக்கை எடுக்க கோரி, ஊட்டி ஆர்.டி.ஓ.,வுக்கு பரிந்துரை செய்தோம்,'' என்றார்.
ஊட்டி ஆர்.டி.ஓ., தியாகராஜன் கூறுகையில், '' ஏற்கனவே, கடந்த, 2020ம் ஆண்டு டிச., 4ம் தேதி முதல், 2021 மார்ச் 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சத்தியராஜின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
எனவே, பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி, 2024ம் ஆண்டு மார்ச், 7ம் தேதி முதல், 2034ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி வரை ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

