ADDED : ஏப் 01, 2026 10:09 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரியில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோத்தகிரி தாலுாக அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை, தாசில்தார் மகேந்திரகுமார் துவக்கி வைத்தார். நகரின் முக்கிய சாலைகள் வழியாக, சென்ற பேரணி, காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள் திரளானோர் பங்கேற்று, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரணியின் நடுவில், நாட்டுப்புற கலைஞர்களின் கரகாட்டம், கும்மி, கானா பாடல்கள் மற்றும் நாடகம் வாயிலாகவும், 100 சதவீதம் வாக்களிக்க கோஷங்கள் எழுப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
