/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் 105 பேர் கைது
/
மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் 105 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் 105 பேர் கைது
மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் 105 பேர் கைது
ADDED : ஜூலை 17, 2025 09:29 PM
ஊட்டி; ஊட்டியில் மறியலில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் முக்கிய கோரிக்கைகளான, 'பழைய ஓய்வூதிய திட்டம்; இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கும் இணையான ஊதியம்; அரசாணை, 243 ரத்து செய்ய வேண்டும்,' உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். எவ்வித நடவடிக்கையும் இல்லை.
அதிருப்தி அடைந்த தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே மறியலில் ஈடுபட்டனர். இதில் , பெண்கள் உட்பட 105 பேர் கைது செய்யப்பட்டனர்.